+91-9842463864 info@teluguvivaham.com
அன்பார்ந்த கவரா நாயுடு மக்களுக்கு நமஸ்காரம். புருசோத்தமன் கோவிந்தசாமி நாயுடு ஆகிய நான் 80 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளேன். கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து 2000 ஆண்டுகள் வரையிலும் தமிழ் நாட்டின் பிரபல பத்திரிகைகள் ஆன ஆனந்த விகடன், இதயம் பேசுகிறது,பாலமித்ரா, ரத்னாபாலா, அம்புலிமாமா, மங்கை, பொம்மை, ஆங்கில வார பத்திரிகை SUNDAY, IDIATODAY, BUSINESS TODAY, DALAL STREET JOURNAL ஆகிய அனைத்து பத்திரிகைளுக்கும் மதுரையின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே விநியோகஸ்தர் ஆக இருந்து பணியாற்றிய என்னையம் என் குடும்பத்தையும் இறைவன் நல்ல முறையில் வைத்து இருப்பதால் நமது கவரா நாயுடு மக்களின் நலனுக்கு என்னால் முடிந்த அளவுக்கு அவர்கள் வாழ்வில் நன்மை பயக்க பணியாற்றி வருகிறேன். இந்த திருமண தகவல் மையத்தில் சுமார் 5000 திருமணங்கள் நடந்துள்ளது என்பதை மகிச்சியுடன் தங்களுக்கு தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் வலைத்தளத்தின் வாயிலகாவும் மணமக்களை நல்ல முறையில் தேர்ந்து எடுத்து மணமக்கள் நீண்ட நெடுங்கலாம் வாழ இறைவனை பிராத்தித்து. இந்த www.teluguvivaham.com என்ற இணைய தளத்தின் மூலம் பயன் பெற வேண்டி கேட்டுக்கொள்கிறேன், நமஸ்காரம்.